Categories: வணிகம்

SBI Small Account: அடடா… அடடா… எஸ்.பி.ஐ வங்கி வழங்கும் அருமையான சேமிப்பு திட்டம்

How SBI Small account Works and Interest Rates: ஏழை மக்களும் சேமிப்பை தொடங்க வேண்டும் என்ற நோக்கத்துடன், கட்டணமில்லா சிறிய அளவிலான கணக்குகளை தொடங்க ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வழிவகை செய்கிறது. KYC ஆவணங்கள் இல்லாத 18 வயதிற்கும் மேற்பட்டோர் இந்த சிறிய கணக்குகளை(Small Account) இதன் மூலம் தொடங்க முடியும். இருப்பினும், KYC ஆவணங்கள் தேவையில்லை என்று சொல்லி இருப்பதால், இந்த சிறிய கணக்கை தொடங்க வேறு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவை என்னென்ன என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

18 வயதுக்கு மேற்பட்டோர் எஸ்.பி.ஐ.யின் சிறிய கணக்கை தொடங்க முடியும்.

எஸ்பிஐயின் சேமிப்பு கணக்கை போல, சராசரி மினிமம் பேலன்ஸ் இந்த கணக்கில் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

எஸ்பிஐ-யின் வழக்கமான சேமிப்பு திட்ட கணக்குகளுக்கு என்ன வட்டி விகிதமோ, அதே வட்டி விகிதம் தான் இந்த சிறிய கணக்கிற்கும் பொருந்தும்.

இந்த சிறிய கணக்கில் அதிகபட்சமாக ரூ.50,000 வரை வைத்துக் கொள்ள முடியும்.

ஒருவேளை, ரூ.50,000 அல்லது அதற்கும் மேற்பட்ட தொகை, இந்த சிறிய கணக்கில் க்ரெடிட் செய்யப்பட்டாலோ, அல்லது வருடத்திற்கு ஒரு லட்சத்திற்கும் மேல் பரிவர்த்தனை நடந்தது என்றாலோ, அடுத்த முறை KYC ஆவணங்கள் சமர்ப்பிக்காத வரை எந்த வங்கி பரிமாற்றமும் செய்ய முடியாது.

ரூபே-வின் ஏடிஎம் டெபிட் கார்டு இந்த சிறிய கணக்கு பயனாளிகளுக்கு கொடுக்கப்படும். இதற்கு எந்த கட்டணமும் கிடையாது. வருடாந்திர கட்டணமும் கிடையாது. NEFT/RTGS மூலம் செய்யப்படும் பணப் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் இலவசம்.

ஒரு மாதத்திற்கு ரூ.10,000க்கும் மிகாமல் பணப் பரிவர்த்தனையோ, பணம் எடுக்கவோ கூடாது. ஒரு நிதியாண்டில் ஒரு லட்சத்திற்கும் அதிகமாக க்ரெடிட் ஆகக் கூடாது.

மாதத்திற்கு அதிகபட்சமாக 4 முறை பணம் எடுத்துக் கொள்ளலாம். எஸ்பிஐ ஏடிஎம் மற்றும் இதர வங்கிகளின் ஏடிஎம்களில் பணம் எடுத்துக் கொள்ளலாம்.

சிறிய கணக்குகள் தொடங்கி 24 மாதத்திற்குள் KYC ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை எனில், இதர பரிவர்த்தனைகள் ரத்து செய்யப்படும்.

அதன்பின், சிறிய கணக்குகள் வழக்கமான எஸ்பிஐ சேமிப்பு கணக்காக மாற்றப்பட்டுவிடும்.

Share

Recent Posts

கறுப்பு பணம் பரம ரகசியமாம்… தகவல் சொல்லக் கூடாதாம்

டெல்லி: நாட்டில் எவ்வளவு கறுப்புப் பணப் புழக்கம் எவ்வளவு உள்ளது என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப் பட்ட கேள்விக்கு அது இரு நாடுகளுக்கு…

1 hour ago

இன்றைய (20.05.2019) பெட்ரோல், டீசல் விலை: இன்று அதிரடி மாற்றத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி!!

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை நிர்ணயித்து வந்தது. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை கைவிடப்பட்டு, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை…

1 hour ago

இன்றைய(மே 20) பெட்ரோல் , டீசல் நேற்றைய விலையை விட அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் நிலவரத்தை பொருத்து இந்தியாவில் உள்ள பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றனர்.இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள…

1 hour ago

பிரச்சினையை டெபாசிட் பண்ணிட்டு வன்முறையை வட்டிக்கு வாங்கும் ட்ரம்ப் – வரி இல்லாத வர்த்தகம்

வாஷிங்டன்: சர்வதேச வர்த்தகத்தில் இந்தியா சீனாவுடன் கடும் மோதல் போக்கை கடைபிடித்து வரும் அமெரிக்க தன் அண்டை நாடுகளான கனடா மற்றும் மெக்ஸிகோ உடன் இணக்கமான போக்கை…

1 hour ago

பங்குச் சந்தையில் திடீர் உற்சாகம்: சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு

பங்குச் சந்தையில் வர்த்தகம் துவங்கிய போது மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 900 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.முந்தைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 37…

1 hour ago

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்வு

அந்நியச் செலாவணி சந்தையில் இன்று திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 79 காசுகள் உயர்ந்தது.சீனா-அமெரிக்கா இடையில் ஏற்பட்டுள்ள வர்த்தக நெருக்கடிக்கு பேச்சுவார்த்தையின் மூலம் நல்ல தீர்வு…

1 hour ago