Categories: வணிகம்

மாநில மகளிரணி, மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்!

திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறைக்குப் புதிய பொறுப்பாளர்கள் மாநில அளவில் சுற்றுப்பயணம் செய்து மாவட்ட அளவில் புதிய பொறுப்பாளர்கள் நியமனம், பிரச்சாரம், குடும்பக் கலந்துரையாடல் நடத்திட முடிவு ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்கு தாயின் ஜாதியை எடுத்துக்கொள்ளலாம் என்ற நீதிமன்றத் தீர்ப்புக்கு வரவேற்பு சென்னை, மே 15 திராவிடர் கழக மாநில மகளிரணி மற்றும் மகளிர் பாசறைக்குப் புதிய பொறுப்பாளர்கள் நியமனம் மற்றும் செயல்பாடுகள் குறித்து முக்கிய முடிவுகள் தீர்மானிக்கப்பட்டன.திராவிடர் கழக மகளிரணி மகளிர் பாசறையின் மாநிலக் கலந்துரையாடல் கூட்டம் சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் இன்று (15.5.2019) புதன்கிழமை காலை 11 மணிக்கு நடைபெற்றது.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:தீர்மானம் எண் 1: இரங்கல் தீர்மானம்திராவிடர் கழகத்தின் பொருளாளராக, மகளிரணி, மகளிர் பாசறைகளுக்கு வழிகாட்டியாக இருந்து அரும்பணியாற்றிய திராவிடர் கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி அவர்களின் மறைவிற்கு இக்கூட்டம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.தீர்மானம் எண் 2: மகளிர் பணிகள்பெண்கள் மற்றும் மாணவிகள் தொடர்பான முக்கிய பிரச்சினைகளை மய்யப்படுத்தி, துண்டறிக்கைகள் வெளியிடுவது, பிரச்சாரம் செய்வது, தேவைப்படும் சமயத்தில் போராட்டங்களில் ஈடுபடுவது என்று தீர்மானிக்கப்படுகிறது.தீர்மானம் எண் 3: மகளிரணி – மகளிர் பாசறைக்குப் புதிய பொறுப்பாளர்கள்திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை செயல்பாடுகளை ஊக்குவித்து மாநிலம் தழுவிய அளவில் பலம் வாய்ந்த அணிகளாகக் கட்டமைப்பது என்றும், அதற்கு முழுமையான அளவில் நேரம் ஒதுக்கிப் பணியாற்றிட மாநிலப் பொறுப்புகளுக்குக் கீழ்க்கண்டவர்களை நியமிப்பது என்றும் தீர்மானிக்கப் படுகிறது.மகளிரணி மாநில செயலாளர்:தகடூர் தமிழ்ச்செல்விமகளிரணி மாநில அமைப்பாளர்:பேராசிரியர் கண்மணி, தேவக்கோட்டைமாநில மகளிர் பாசறை மாநில செயலாளர்:வழக்குரைஞர் மணியம்மைமாநில மகளிர் பாசறை மாநில அமைப்பாளர்:சட்டக்கல்லூரி மாணவி மதிவதனிசென்னை மண்டல மகளிரணி தலைவர்:தங்க.தனலட்சுமிசென்னை மண்டல மகளிரணி செயலாளர்:ஓவியா தீர்மானம் எண் 4: அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழாவை வெகுசிறப்பாக நடத்த முழு ஒத்துழைப்புத் தருதல்அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழாவை கழக மகளிரணி, மகளிர் பாசறையினர் முன்னின்று சிறப்பாக நடத்துவதற்கு முழு ஒத்துழைப்பு அளிப்பது என்று தீர்மானிக்கப்படுகிறது.தீர்மானம் எண் 5: குடும்பங்களுக்கிடையே கொள்கை உறவைப் பலப்படுத்துக!மாவட்டம் தோறும் சென்று மகளிரைச் சந்தித்து கலந்துரையாடி பொறுப்பாளர்களைப் புதிதாக நிய மித்து, மகளிர் அணி மற்றும் பாசறையின் பணிகளை மேம்படுத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
குடும்பக் கலந்துரையாடல் கூட்டங்களை நடத்தி, குடும்பங்களுக் கிடையே கொள்கை உறவைப் பலப்படுத்துவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.தீர்மானம் எண் 6: ஜாதி மறுப்புத் திருமணத்தில் பிறந்த குழந்தைக்கு தாயின் ஜாதியைப் பயன்படுத்தலாம் என்ற வரவேற்கத்தக்க தீர்ப்புதருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப் பட்டியைச் சேர்ந்த அற்புதராஜ் – இளவரசி ஆகியோர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அசோக் குமார், கங்குலி மற்றும் நீதிபதி ஜோதிமணி ஆகியோர் அடங்கிய அமர்வு – ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களின் குழந்தைகள் தந்தையின் ஜாதியைச் சேர்ந்தவர்களாகத்தான் கருதப்படுவர் என்று தீர்ப்பு வழங்கியது (2008, டிசம்பர்).இந்தத் தீர்ப்பை மாற்றவேண்டும் என்று திராவிடர் கழக மகளிர் அணி மாநாடுகளில் தொடர்ந்து தீர்மானங் களை நிறைவேற்றி வலியுறுத்தி வந்துள்ளோம்.அதற்கு வெற்றி கிடைக்கும் வகையில், மகாராட்டிர மாநிலத்தைச் சேர்ந்த பட்வாய்க் என்ற எம்.பி.பி.எஸ். படிக்கும் மாணவி தொடர்ந்த மேல்முறையீட்டில் – மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை நீதிபதிகள் சுனில் சுக்ரே, புஷ்பா கனேடிவாலா ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ள தீர்ப்பு (21.4.2019) வரவேற்கத்தகுந்த சிறப்பான ஒன்றாகும்.இந்தியாவில் ஆணாதிக்க சமுக அமைப்பு உள்ளது. இப்போது மாறி வருகிறது. நமது அரசமைப்புச் சட்டம் கூட சமத்துவம், நீதி மற்றும் சகோதரத்துவம் அடிப்படையில்தான் உள்ளது. ஆண் மற்றும் பெண்ணை நாம் சமமாகவே பாவிக்கிறோம். எனவே, ஜாதி கலப்பு தம்பதியினருக்குப் பிறந்த குழந்தைகள் தனது தாயாரின் ஜாதியையும் பயன்படுத்தலாம்” என்று தீர்ப்பு வழங்கி இருப்பது தந்தை பெரியார் கொள்கைக்கு, திராவிடர் கழகத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என்று இக் கூட்டம் கருதி மகிழ்கிறது.தீர்மானம் 7: சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு தேவைசட்டப்பேரவைகளிலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடுபற்றி திருத்தம் ஒன்றை மாநிலங்களவை உறுப்பினர் தோழர் டி.கே.ரெங்கராஜன் (சி.பி.எம்.) கொண்டு வந்தபோது (7.2.2018) அத்திருத்தத்துக்கு எதிராக பி.ஜே.பி.யுடன் சேர்ந்து அ.தி.மு.க. உறுப்பினர்களும் வாக்களித்ததை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.1996 முதல் நிலுவையில் இருந்துவரும் இந்த சட்ட முன்வடிவை விரைவில் நிறைவேற்றுமாறு இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

Share

Recent Posts

கறுப்பு பணம் பரம ரகசியமாம்… தகவல் சொல்லக் கூடாதாம்

டெல்லி: நாட்டில் எவ்வளவு கறுப்புப் பணப் புழக்கம் எவ்வளவு உள்ளது என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப் பட்ட கேள்விக்கு அது இரு நாடுகளுக்கு…

3 hours ago

இன்றைய (20.05.2019) பெட்ரோல், டீசல் விலை: இன்று அதிரடி மாற்றத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி!!

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை நிர்ணயித்து வந்தது. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை கைவிடப்பட்டு, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை…

3 hours ago

இன்றைய(மே 20) பெட்ரோல் , டீசல் நேற்றைய விலையை விட அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் நிலவரத்தை பொருத்து இந்தியாவில் உள்ள பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றனர்.இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள…

3 hours ago

பிரச்சினையை டெபாசிட் பண்ணிட்டு வன்முறையை வட்டிக்கு வாங்கும் ட்ரம்ப் – வரி இல்லாத வர்த்தகம்

வாஷிங்டன்: சர்வதேச வர்த்தகத்தில் இந்தியா சீனாவுடன் கடும் மோதல் போக்கை கடைபிடித்து வரும் அமெரிக்க தன் அண்டை நாடுகளான கனடா மற்றும் மெக்ஸிகோ உடன் இணக்கமான போக்கை…

3 hours ago

பங்குச் சந்தையில் திடீர் உற்சாகம்: சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு

பங்குச் சந்தையில் வர்த்தகம் துவங்கிய போது மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 900 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.முந்தைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 37…

3 hours ago

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்வு

அந்நியச் செலாவணி சந்தையில் இன்று திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 79 காசுகள் உயர்ந்தது.சீனா-அமெரிக்கா இடையில் ஏற்பட்டுள்ள வர்த்தக நெருக்கடிக்கு பேச்சுவார்த்தையின் மூலம் நல்ல தீர்வு…

3 hours ago