Categories: வணிகம்

தென்மண்டல திராவிட மாணவர் கழகக் கலந்துரையாடல்

மாணவச் செல்வங்களே, பெரியார் சமுகக் காப்பு அணியில் இணைந்திடுவீர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் வேண்டுகோள் மதுரை, மே 15- தென்மண்டல திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம் 11.5.2019 அன்று மாலை 6 மணிக்கு மதுரை எஸ்.ஏ.எஸ் பழக்கடை அரங்கில் எழுச்சியோடு நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் தலைமை வகித்தார்.பெரியார் பிஞ்சுகள் சு.மகிமதி தந்தை பெரியார் பற்றிய பாடலையும், மு.கவுன்மதி புரட்சிக் கவிஞர் பாடலையும் பாடி மகிழ்ந்தார்கள். மாவட்ட மாணவர் கழக தலைவர் க.ரோசன் வரவேற்புரையாற்றினார். கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கத்தினை விளக்கி திராவிடர் கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் தொடக்க உரையாற்றினார்.திராவிட மாணவர் கழகத்தில் இணைந்து தீவிரமாக செயலாற்றுவோம் என சூளுரைத்து மாணவர்கள் உரையாற்றியதைத் தொடர்ந்து மாநில மாணவர் கழக செயலாளர் ச.பிரின்சு என்னாரசு பெரியார், மாநில மாணவர் கழகக் கூட்டு செயலாளர் சே.மெ.மதிவதனி, மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரப் பாண்டியன், மண்டல திராவிடர் கழகத் தலைவர் மா.பவுன்ராசா, மாநில அமைப்பு செயலாளர் வே.செல்வம் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
புதிய பொறுப்பாளர்களை மாநில மாணவர் கழக செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் அறிவித்தார்.தீர்மானங்களை மாவட்ட மாணவர் கழக தலைவர் செ.அரிகரசுதன் முன்மொழிந்தார். நிறைவாக தலைமை யுரையாற்றிய கழகப் பொதுச் செயலாளர், அன்னை மணியம்மையார் நூற்றாண்டில், அறிவாசான் தந்தை பெரியார் தத்துவங்களை தீவிரமாக பரப்பிடும் பணியில் மாணவர்கள் முனைப்புடன் ஈடுபட வேண்டும்.தமிழர் தலைவர் மேற்கொள்ளும் அத்துணை பணி களிலும் மாணவர்கள் பங்கு முக்கியமாக அமைந்திட வேண்டும். உடல்நலம், உளநலம் ஆகியவற்றை பேணிக் காப்பதற்கு தந்தை பெரியார் தன்மான கருத்துக்களை பரப்பிடும் போர்வீரர்களாய் திகழ்வதற்கு பெரியார் சமுகக் காப்பு அணியில் இணைந்து செயலாற்ற வேண்டுமென கேட்டு கருத்துரை வழங்கினார்.நிகழ்ச்சியில் தென்மாவட்ட பிரச்சாரக் குழுத் தலைவர் தே.எடிசன்ராசா, திண்டுக்கல் மண்டல செயலாளர் கருப்புச்சட்டை நடராசன், மண்டல செயலாளர் நா.முருகேசன், மாவட்டத் தலைவர் அ.முருகானந்தம், மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் எரிமலை, விருதுநகர் மாவட்ட செயலாளர் தி.ஆதவன், மதுரை மாவட்ட துணைத்தலைவர் வேங்கைமாறன், மாவட்டத் துணைச் செயலாளர் செல்வம், விடுதலை ராதா, மாவட்ட அமைப்பாளர் செல்லூர் திருப்பதி உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் பங்கேற்று சிறப்பித் தனர். பிரிஸ்ட் சட்டக் கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர் கி.அருண்குமார் நன்றி கூறினார்.நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நீட் நுழைவுத்தேர்வு கொடுமைகள் இன்னும் தொடர்கின்றன. தேர்வு எழுத வரும் மாணவர்களை உளவியல் சிக்கலுக்கு உள்ளாக்கி, தேர்வு எழுதத் தடை செய்யும், சர்வாதிகாரப் போக்கு கடும் கண்டனத்திற் குரியது.அமையவிருக்கும் மத்திய அரசு நீட்டை ஒழிப்பதில் முனைப்புக்காட்டி இவ்வாண்டு மருத்துவ கல்லூரி நேர்காணலை +2 தேர்வுகளின் அடிப்படையில் நடைபெற செய்ய வேண்டுமென இக்கூட்டம் வலி யுறுத்துகிறது.

Share

Recent Posts

கறுப்பு பணம் பரம ரகசியமாம்… தகவல் சொல்லக் கூடாதாம்

டெல்லி: நாட்டில் எவ்வளவு கறுப்புப் பணப் புழக்கம் எவ்வளவு உள்ளது என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப் பட்ட கேள்விக்கு அது இரு நாடுகளுக்கு…

2 hours ago

இன்றைய (20.05.2019) பெட்ரோல், டீசல் விலை: இன்று அதிரடி மாற்றத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி!!

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை நிர்ணயித்து வந்தது. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை கைவிடப்பட்டு, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை…

2 hours ago

இன்றைய(மே 20) பெட்ரோல் , டீசல் நேற்றைய விலையை விட அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் நிலவரத்தை பொருத்து இந்தியாவில் உள்ள பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றனர்.இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள…

2 hours ago

பிரச்சினையை டெபாசிட் பண்ணிட்டு வன்முறையை வட்டிக்கு வாங்கும் ட்ரம்ப் – வரி இல்லாத வர்த்தகம்

வாஷிங்டன்: சர்வதேச வர்த்தகத்தில் இந்தியா சீனாவுடன் கடும் மோதல் போக்கை கடைபிடித்து வரும் அமெரிக்க தன் அண்டை நாடுகளான கனடா மற்றும் மெக்ஸிகோ உடன் இணக்கமான போக்கை…

2 hours ago

பங்குச் சந்தையில் திடீர் உற்சாகம்: சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு

பங்குச் சந்தையில் வர்த்தகம் துவங்கிய போது மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 900 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.முந்தைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 37…

2 hours ago

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்வு

அந்நியச் செலாவணி சந்தையில் இன்று திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 79 காசுகள் உயர்ந்தது.சீனா-அமெரிக்கா இடையில் ஏற்பட்டுள்ள வர்த்தக நெருக்கடிக்கு பேச்சுவார்த்தையின் மூலம் நல்ல தீர்வு…

2 hours ago