Categories: வணிகம்

சங்கராபுரத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற சுயமரியாதை நாள் விழா – பொதுக்கூட்டம்

சங்கராபுரம், ஜன. 11 கல்லக்குறிச்சியை அடுத்துள்ள சங்கராபுரத்தில் 19.12.2018 அன்று பேருந்து நிலைய பொதுக்கூட்ட மேடையில் தமிழர் தலைவர் பிறந்தநாள் & சுயமரியாதை நாள் என் கடன் பெரியார் பணி முடிப்பதே திராவிடர் கழகப் பொதுக்கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.கூட்டத்திற்கு மாவட்ட இளைஞர் அணித்தலைவர் அ.கரிகாலன் தலைமை தாங்கினார். சங்கராபுரம் நகர கழகத் தலைவர் இல.சேரன் வரவேற்புரை ஆற்றினார். விழுப்புரம் மண்டல கழகச் செயலாளர் குழ.செல்வராசு கழகக் கொடியை ஏற்றிவைத்தார். மாவட்டத் தலைவர் ம.சுப்பராயன் தொடக்கவுரை யாற்றினார். மாவட்ட கழக அமைப்பாளர் த.பெரியசாமி, மாவட்ட துணைத்தலைவர் ஓவிய இமயம் மு.கலைச்செழியன், மாவட்ட கழக மகளிர் அணித்தலைவர் பழனியம்மாள் கூத்தன், சங்கராபுரம் நகர பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் இரா.நாராயணன், மூங்கில்துறைப்பட்டு நகர கழக தலைவர் நூ.சலீம், மூங்கில் துறைப்பட்டு திருவள்ளுவர் தமிழ் மக்கள் இயக்கத்தலைவர் முனைவர் ம.விசய் ஆனந்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மந்திரமா?
தந்திரமா? முதலில் திண்டுக்கல் ஈட்டி.கணேசன், அவர்களின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். மண்ணை சக்கரையாக மாற்றுதல், முட்டையை பையில் போட்டு நசுக்கி, அம்முட்டையை பார்வையாளரிடம் இருந்து வரவைத்தல், சணல் கயிறை துண்டித்து அதனை முடிச்சு போட்டு பின் முடிச்சில்லாமல் ஒரே கயிறாக மாற்றுதல், காலியான துணிப்பையில் இருந்து அழகான கைக்குட்டையை வரவைத்தல் உள்ளிட்ட பல நிகழ்ச்சி களை நடத்தினார். பிறகு அவையெல்லாம் மந்திரத்தால் செய்யப்பட்டது அல்ல; தந்திரத்தால் செய்ததே என விளக்கமும் அளித்தார். ஓவ்வொரு நிகழ்ச்சியின் இறுதியிலும் பொதுமக்கள் கை தட்டி ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளி படுத்தினார்கள்.பா.மணியம்மைதலைமைக் கழகப் பேச்சாளரும் மாநில மாணவர் கழக இணைச் செய லாளருமான (மகளிர் பிரிவு) வழக்குரை ஞர் பா.மணியம்மை எழுச்சியுரை ஆற்றினார். அவர் தமது உரையில் தந்தை பெரியார் மறைந்து 45 -ஆண்டுகள் ஆகிறது. பெரியாருக்குப்பின் இவ்வியக் கம் இருக்குமா! என்று கேலி பேசிய வர்களும், எக்காளம் இட்டவர்களும் நிறையபேர்கள்! அவர்களெல்லாம் வெட் கப்பட்டு தலைகுனியும்படி அன்னை மணியம்மையார் திராவிடர் கழகத்தினை தலைமையேற்று சிறப்பாக வழிநடத்தி னார். உலகத்திலேயே ஒரு நாத்திக இயக்கத்திற்கு தலைமைதாங்கி வழி நடத்திய பெருமை அன்னை மணியம் மையாருக்கு மட்டுமே உண்டு. அவர் மறைவிற்குப் பிறகு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திராவிடர் கழகத்தின் தலைமையேற்று பெரியார் சிந்தனைகளை இந்திய துணைக்கண்டம் மட்டுமல்லாது, உலகமெங்கும் பரப்பி வருகிறார்.நாத்திக மய்யம்இந்தியாவின் நாத்திக மய்யமாக பெரியார் திடல் விளங்கி வருகிறது. ஏனெனில், அரசியலாளர்கள் ஆலோ சனை பெறவும் ஆறுதல் பெறவும் இங்குதான் வருகிறார்கள். உலக நாத்திகத் தலைவர்கள் விரும்பிவரும் இடமாகவும், பெரியார் திடல் விளங்குகிறது. தமிழர் தலைவர் 56-ஆண்டுகளாக விடுதலை நாளிதழின் ஆசிரியராக செயல்பட்டு வருகிறார். சமூக நீதிக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அதைக்கண்டித்து, சட்ட ரீதியாகவும், நியாமானதாகவும் அறிக்கை விடுகிறார். தேவைப்படும் போது பேராட்டங்களை நடத்தி சமூக நீதியை நிலை நாட்டுகிறார். பிற்படுத் தப்பட்டவர்களுக்கான மண்டல் கமிசன் அறிக்கையை அமல்படுத்த 32 மாநாடுகளையும் 16 போராட்டங்ளையும் நடத்தி வெற்றி கண்டவர் நம் தமிழர் தலைவர். தமிழக மாணவர்களை வஞ்சிக்கும் நீட் தேர்வு அபாயத்தை முன்கூட்டியே தடுத்து நிறுத்த தமிழ் நாட்டின் எல்லாப் பகுதி மக்களுக்கும் 5 குழுக்களாகப் பிரச்சாரம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார் நம் தமிழர் தலைவர்! சங்கராபுரத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழர் தலைவர் பிறந்தநாள் – சுயமரியாதை நாள் என் கடன் பெரியார் பணி முடிப்பதே திராவிடர் கழகப் பொதுக்கூட்டத்தில் திரண்டிருந்தோர் (19.12.2018)மத்திய தகவல் தொடர்பு முன்னாள் அமைச்சர் ஆ.இராசா, 10 ரூபாயில் பேச வேண்டியதை 1 ரூபாயில் பேசலாம் என்ற திட்டம் தீட்டி அமைச்சரவை ஒப்புதலுடன் நடைமுறைப்படுத்தினார். இதில் 1 இலட்சத்து 76ஆயிரம் கோடியை அமைச்சர் ஊழல் செய்து விட்டார் என்று உண்மை அறியாமல் எதிர்கட்சியினர் கூவினார்கள். அதை ஊடகங்களும் ஊதி பெரிதாக்கின. இதன் காரணமாக ஆ.இராசா திகார் சிறையில் இருந்த போது தமிழர் தலைவர் நேரில் சென்று நம்பிக்கையூட்டும் ஆலோசனை சொன் னார். இவ்வழக்கில் ஆ.இராசா அவர்களே ஆஜராகி இந்திய மக்களுக்கெல்லாம் 10 ரூபாயில் தரவேண்டிய தகவலை 1 ரூபாயில் தரும்போது அரசுக்கு இழப்பு தான்! ஆனால் மக்களுக்கு அது ஒரு பெரிய சேவை! மக்களுக்குச் சேவை செய்வதுதானேஅரசாங்கத்தின் பொறுப்பு! என்று வாதிட்டார். கனம் நீதிபதி அவர்கள் வழக்கின் நியாயத்தை உணர்ந்து ஆ.இராசா அவர்களை குற்ற மற்றவர் என விடுவித்தார்.தமிழர் தலைவர் ஓய்வில்லாமல் தமிழர்களின் நலன்களுக்காக பாடுபட்டு வருகிறார். அவர் இன்னும் பல ஆண் டுகள் வாழ வேண்டும். தமிழர்களாகிய நாம் எல்லாம் அவருக்கு உறுதுணையாக விளங்குவோம். என்று கூறி முடித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட திராவிடர் கழக இலக்கிய அணித்தலைவர் பெ.சயராமன், மாவட்ட ப.க. தலைவர். பெ.எழிலரசன்; அமைப்பாளர் சி.முருகன், ரிஷிவந்தியம் ஒன்றிய கழக தலைவர் அர.சண்முகம், மாவட்ட திராவிடர் கழக இளைஞர் அணி அமைப்பாளர் நா.பெரியார், கல்லை நகர கழக தலைவர் ச.சுந்தரராசன் மேலூர் கிளைக்கழகத் தலைவர் ஆ.பழனிமுத்து, குளத்தூர் கழகத் தலைவர் இரா.சிவக்குமார், அத்தியூர் பகுத்தறிவாளர் கழகத்தலைவர் க.பார்த்திபன், புத்திராம் பட்டு ப.க. தலைவர் கோ.விஜயன், குளத்தூர் பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் பி.கோவிந்தன், நா.ஆறுமுகம், ச.முனியன், சங்கராபுரம் தமிழ் படைப்பாளர் சங்கத் தலைவர் குறிஞ்சி அரங்க செம்பியன், சங்கைத் தமிழ் சங்க செயலாளர் கவிஞர். ச.சாதிக் பாட்சா, மூவேந்தர் கலை இலக்கியப் பேரவைத் தலைவர் தி.ம.சுப்பிரமணியன், முத் தமிழ் கலை இலக்கிய பேரவைத்தலைவர் நல்லாசிரியர் மு.முகமது உசேன், தியாக துருகம் கவிஞர் கல்யாணி நடராசன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இறுதியில் சங்கராபுரம் நகர பகுத் தறிவாளர் கழகத் தலைவர் ஆ.இலக் குமிபதி நன்றி கூற கூட்டம் இனிதே முடிந்தது.

Share

Recent Posts

பள்ளி மாணவர்களுடன் தகாத உறவு வைத்த ஆசிரியை ‘போக்சோ’ சட்டத்தில் கைது

ஆரணி:ஆரணியை அடுத்த பையூர் காலனி பகுதியை சேர்ந்தவர் உமேஷ்குமார் (வயது 45), ஆசிரியர். இவரது மனைவி நித்யா (30). வேலூர் மாவட்டம் மாமண்டூர் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக…

59 mins ago

குடியாத்தம் அருகே பிளாஸ்டிக் கிடங்கில் தீ விபத்து

குடியாத்தம்: குடியாத்தம் அருகே பழைய பிளாஸ்டிக் பொருள்கள் சேமித்து வைக்கும் கிடங்கில் ஏற்பட்ட திடீா் தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருள்கள் எரிந்து…

59 mins ago

கிளி ஜோசியத்தை நம்பி நான் அரசியல் செய்யவில்லை- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

சென்னை:தமிழகத்தில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகளும் புதுச்சேரி தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. தமிழ்நாடு…

59 mins ago

அ.தி.மு.க. சிறைக்கு செல்வதை தவிர்க்கவே பா.ஜ.க.வுடன் கூட்டணி- ஸ்டாலின் குற்றச்சாட்டு

அரூர்:அரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கிருஷ்ணகுமாருக்கு ஆதரவாக அரூரில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது, அமித்ஷாவிடம் அ.தி.மு.க.வை எடப்பாடி பழனிசாமி அடகு…

59 mins ago

ஈரோடு தொகுயில் உதய சூரியன் சின்னம்… பணிந்தது ம.தி.மு.க

திமுக கூட்டணியில் மதிமுக ஈரோடு தொகுதியில் போட்டியிடுகிறது. அந்த கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கையில் மதிமுக தனி சின்னத்தில் நிற்கும் என்று அறிவித்தார்.ஆனால்…

59 mins ago

திருப்பூர் தொகுதியில் 27-ந்தேதி பிரசாரத்தை தொடங்குகிறார் பிரேமலதா

சென்னை:அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க. 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தே.மு.தி.க. வேட்பாளர்களை ஆதரித்து கடந்த காலங்களில் விஜயகாந்த் தேர்தல் பிரசாரம் செய்தார். தற்போது உடல் நலம்…

59 mins ago