Categories: வணிகம்

சீனாவைவிட வேகமாக வளரும் இந்திய பொருளாதாரம்.. பாக். பக்கத்திலேயே வர முடியாது: உலக வங்கி அறிக்கை

டெல்லி: இந்திய பொருளாதாரம், 2018-19ல் தொடர்ந்து வேகமாக வளரும் என்று உலக வங்கி கணித்துள்ளது.

இதுகுறித்து உலக வங்கி தனது ஆய்வு அறிக்கையை நேற்று வெளியிட்டிருந்தது. அதில் கூறியுள்ள முக்கிய அம்சங்கள் இவைதான்:

இந்தியாவில், நடப்பு நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP), 7.3 சதவீத வளர்ச்சியில் இருக்கும். அடுத்த இரு நிதியாண்டுகளில் இது 7.5 சதவீதம் அளவுக்கு உயரக்கூடும். அதேநேரம், சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.3 சதவீதமாக இருக்கும்.

ஜிஎஸ்டி மற்றும் பண மதிப்பிழப்பு போன்ற இந்திய அரசின் சமீபகால நடவடிக்கைகள், அமைப்பு சாராமல் இருந்து வந்த துறைகளை, அமைப்புக்கு உள்ளே கொண்டுவர ஊக்கம் தரக்கூடியவை.
இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்க முக்கிய காரணம், முதலீடு மற்றும் நுகர்வு ஆகியவையாகும். பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி அறிமுகத்தால் தற்காலிகமாக மந்தநிலையில் இருந்த இந்திய பொருளாதாரம், இனி வேகம் பிடிக்கும்.

சீனா நிலவரம் சீனா நிலை

சீனா 2019-20ம் நிதியாண்டில், 6.2 சதவீதம் அளவுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியை கொண்டிருக்கும். 2021ல் இது மேலும் குறைந்து 6 சதவீதம் என்ற அளவில் இருக்கும். 2018-19ம் நிதியாண்டில், சீனாவின் ஜிடிபி 6.5 சதவீதமாக இருக்கும். இந்தியாவை பொறுத்தளவில் அதன் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையாக இருக்கப்போவது நுகர்வு அதிகரிப்புதான்.

பாகிஸ்தான், இலங்கை பாகிஸ்தான் நிலைமை

பாகிஸ்தான் நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது நம்மைவிட கிட்டத்தட்ட பாதியாகத்தான் இருக்கும். 2018-19ம் நிதியாண்டில், பாகிஸ்தானில், மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.7 சதவீதமாக இருக்கும். வங்கதேசம் இதே நிதியாண்டில் 7 சதவீத ஜிடிபியுடன் வளர்ச்சி பெறும். இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 4 சதவீதமாக இருக்கும்.

ஆசிய மண்டலம் சில மாறுதல்

மற்றொரு அண்டை நாடான நேபாளத்தில், மொத்த உள்நாட்டு வளர்ச்சி விகிதம், 5.9 சதவீதமாக இருக்கும். சில நாடுகளில் மேற்கொள்ளப்படும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் மற்றும் இந்தியாவில் இவ்வாண்டு நடைபெர உள்ள லோக்சபா தேர்தலால் ஆசிய மண்டலத்திலுள்ள நாடுகளின் பொருளாதாரத்தில் சில ஏற்றத்தாழ்வுகள் இருக்க கூடும் என்றும், உலக வங்கி தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

source: oneindia.com

Share
Tags: oneindia

Recent Posts

ஹிப்ஹாப் ஆதியின் நட்பே துணை படத்தின் ரிலீஸ் தேதி வெளியிட்ட படக்குழு

பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் `நட்பே துணை'. ஹாக்கி விளையாட்டு மற்றும் நட்பை மையப்படுத்திய இந்த படத்தில் ஆதி ஜோடியாக…

3 hours ago

படப்பிடிப்பில் இயக்குனருடன் பிரபல நடிகை மோதல்

தமிழில் பாயும் புலி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஆறாது சினம், சத்ரியன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா தத்தா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார்.தற்போது…

3 hours ago

காஷ்மீரில் அத்துமீறி பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி

ஜம்மு:ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த பிப்ரவரி மாதம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 துணை ராணுவ படையினர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு சென்று தீவிரவாத முகாம்கள்…

3 hours ago

கன்னியாகுமரி தொகுதியில் கோடீஸ்வர வேட்பாளர்களுக்கு இடையே போட்டியா?

கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ், பாஜக மற்றும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களின் சொத்து பட்டியல் அடிப்படையில் பார்த்தால் அங்கு கோடீஸ்வர வேட்பாளர்களுக்கு இடையிலான போட்டி போல் காட்சியளிக்கிறது.17-ஆவது…

3 hours ago

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும்; அமைச்சர் அருண் ஜெட்லி உறுதி!

2019-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் மாற்றத்தை கொண்டுவருபவர் மோடி தான் எனவும், வரும் தேர்தலில் பாஜக வெற்றிப் பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என மத்திய நிதி…

3 hours ago

Exclusive Interview: மோடி அலை குறித்து மே 23 அன்று தெரியும் -அருண் ஜேட்லி

மத்திய அமைச்சர் நிதி மந்திரி அருண் ஜெட்லியிடம் ஜி நியூஸ் பத்திரிகை தலைமை ஆசிரியர் சுதிர் சௌத்ரி நேர்காணலை மேற்க்கொண்டார். அப்பொழுது அவர் வரும் மக்களவை தேர்தலைக்…

3 hours ago