Categories: வணிகம்

ரிசர்வ் வங்கி கெடுபிடி; பேடிஎம் பயனாளர்களுக்கு நல்ல செய்தி!

பேடிஎம், அமேசான் பே, போன்பே உள்ளிட்ட மொபைல்வாலெட் நிறுவங்களின் வாடிக்கையாளர்களை, ஆன்லைனில் நடைபெறும் மோசடிபரிவர்த்தனைகளில்இருந்து பாதுகாக்க,பல புதிய விதிகளை ரிசர்வ் வங்கி வகுத்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் மொபைல் வாலெட் நிறுவனங்களின் ஆதிக்கம் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பேடிஎம், அமேசான் பே, போன்பே போன்ற நிறுவனங்கள், தங்கள் வாலெட் கணக்குகள் மூலம் பல ஆஃபர்களை வழங்கி வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகின்றன. அதேநேரம், ஆன்லைன் பரிவர்த்தனையின்போது வாடிக்கையாளரின் பணம் திருடு போக வாய்ப்புள்ளதால், அதுகுறித்து நடவடிக்கை எடுக்க பல விதிகள் நடைமுறையில் உள்ளன.

ஆனால், பேடிஎம் உள்ளிட்டபல நிறுவனங்கள், இதுபோன்ற புகார்களைநேரடியாக பதிவு செய்ய வாடிக்கையாளர்களுக்கு கஸ்டமர் கேர்,டோல் ப்ரீதொலைபேசி எண் போன்ற போதிய சேவைகளை வழங்குவதில்லை.
இதனால் பல வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்க சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து பலபுதிய விதிகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

இதன்படி,

* மொபைல் வாலெட்மூலம் நடைபெறும் அனைத்து பரிவர்த்தனைகளுக்கும், எஸ்எம்எஸ், ஈ-மெயில்மூலம் வாடிக்கையாளர்களுக்கு அலர்ட் கொடுக்கப்பட வேண்டும். அந்த எஸ்.எம்.எஸ்-ஸில்,அனுமதியில்லாமல் பரிவர்த்தனைகள் நடைபெற்றால் அது குறித்துவாடிக்கையாளர்புகார் கொடுக்கஒரு தொலைபேசி எண் மற்றும்ஈ-மெயில் ஐடி குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்

* மொபைல் வாலெட்வாடிக்கையாளர்கள் அனைவரும் கட்டாயமாக அந்தந்தநிறுவனத்தின் எஸ்.எம்.எஸ், ஈமெயில் மற்றும் நோட்டிபிகேஷன் சேவையை பெற்றிருக்க வேண்டும்.

* மோசடி பரிவர்த்தனைகள் குறித்து புகாரளிக்க, மொபைல் வாலெட்நிறுவனங்கள் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய டோல் ப்ரீகஸ்டமர் கேர் உதவி எண், எஸ்.எம்.எஸ், ஈ-மெயில் உள்ளிட்ட புகார்சேவைகளைபயன்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.

* மோசடி பரிவர்த்தனைகள் குறித்து புகாரளிக்கதனியாக ஒரு லிங்க்கை, நிறுவனங்கள் தங்களது மொபைல் ஆப்,இணையதளம் உள்ளிட்டவற்றில் காண்பிக்க வேண்டும்.

* மோசடி பரிவர்த்தனைகள் குறித்து அனுப்பப்படும்புகார்களை அங்கீகரித்து, உடனடியாக ஒரு பதில் எஸ்எம்எஸ், ஈ-மெயிலைவாடிக்கையாளர்களுக்கு நிறுவனங்கள் கொடுக்கவேண்டும். இந்த பதிலில், புகார் அளிக்கப்பட்ட நேரம், புகார் எண் உள்ளிட்டவிவரங்கள் கட்டாயம் இருக்க வேண்டும்.

* நிறுவனத்தின் தவறால், வாடிக்கையாளர்களுக்கு பண இழப்பு ஏற்பட்டிருந்தால், புகார் அளிக்கப்பட்டமூன்று நாட்களுக்குள் முழு பணத்தையும் திருப்பி கொடுக்க வேண்டும்.

* மோசடி பரிவர்த்தனை குறித்து வாடிக்கையாளர் தரப்பிலிருந்து புகார் வராவிட்டால் கூட, பணத்தை உடனடியாக நிறுவனங்கள்திருப்பிக் கொடுக்க வேண்டும்

* மோசடி நடந்து நான்கு முதல் ஏழு நாட்களுக்குள், வாடிக்கையாளர் புகார் அளித்தால், இழந்த தொகைஅல்லது ரூ.10,000; இதில் எது குறைவோ அதை வாடிக்கையாளருக்கு வழங்கவேண்டும்.

*ஏழு நாட்களுக்குப் பிறகு மோசடி குறித்து புகார் அளிக்கப்பட்டால், ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி அதற்கான நடவடிக்கையை வாலெட் நிறுவனமே எடுத்துக்கொள்ளலாம்.

* வாடிக்கையாளர்இழந்த பணத்தை திருப்பிக் கொடுப்பது தொடர்பான அனைத்து புகார்களையும் 10 நாட்களுக்குள் தீர்த்து வைக்க வேண்டும்.

* வேறு எந்தவிதமான புகாராக இருந்தாலும் 90 நாட்களுக்குள் அது குறித்து நடவடிக்கை எடுத்து தீர்த்து வைக்க வேண்டும்.

* வாடிக்கையாளரை அடையாளம் காணும்KYC-யை அனைத்து வாடிக்கையாளர்களும் செய்திருக்க வேண்டும்.செய்யாத வாடிக்கையாளர்களின் வாலெட்கள்,பிப்ரவரி மாதம் முதல் செயல்படாது.

newstm.in

Share

Recent Posts

பொங்கலுக்கு விலை குறைந்த சாம்சங் ஸ்மார்ட்போன்கள்.!

தமிழர் திருநாளாம் தை பொங்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. இதையொட்டி சாம்சங் ஸ்மார்ட்போன் நிறுவனம் தற்போது விலையை குறைந்து விற்பனையை அதிரவிட்டுள்ளது.இதனால் ஏராளமான வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போன்களை வாங்க முன்…

3 hours ago

வோடபோன் வழங்குகிறது மேலும் புதிய சலுகை ரூ.396க்கு உங்களுக்கு கிடைக்கும் 96.6GB டேட்டா…!

தொடர்ந்து வோடபோன் நிறுவனம் சமீபத்தில் ரூ.1,499 விலையில் புதிய சலுகையை அறிவித்தது. பின் சில சலுகைகளை மாற்றியமைத்து பயனர்களுக்கு அதிகளவு பலன்களை வழங்கியது. இதைத்தொடர்ந்து வோடபோன் ரூ.396…

3 hours ago

ட்ராய் யின் அதிரடி அறிவிப்பு 100 DTH சேனல்களுக்கு மாதம் ரூ.153 கட்டணம் செலுத்த வேண்டும்

மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் கேபிள் மற்றும் DTH . சேவை கட்டணம் பற்றி புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் 100 இலவச அல்லது…

3 hours ago

மாதம் 100 டிவி சேனல்கள் ரூ.153 கட்டனம் : டிராய்

இந்திய தொலைத் தொடர்பு ஒழங்குமுறை ஆனையம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் , விருப்பமான 100 டிவி சேனல்களை ரூ.153 கட்டணத்தில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த…

3 hours ago

Honor 10 Lite 24MP Ai செல்பி கேமராவுடன் அறிமுகம்

சிறப்பு செய்திHonor முதல் முறையாக டியூவ்ட்ராப் நோட்ச் உடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 2மாதங்களுக்கு முன்பே சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த போன் பிளிப்கார்டில் எக்ஸ்க்ளுசிவாக விற்பனை…

3 hours ago

பொங்கல் பிளான் தெறிக்கவிடும் பிஎஸ்என்எல்: ஏர்டெல்லுக்கு சாவல்.!

பிஎஸ்என்எல் நிறுவனம் பொங்கல் பிளான் போல் ரூ.798க்கு அறிவித்துள்ளது. இந்த ஆப்பர் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.மேலும், இது ஏரடெல் நிறுவனத்திற்கு கடும் போட்டியை ஏற்படும்…

3 hours ago