Categories: வணிகம்

பாஜக ஆட்சியில் தனிநபர் சராசரி வருமானம் 45சதவிகிதம் அதிகரிப்பு : மத்திய புள்ளியியல் துறை

டெல்லி : தேசிய ஜனநாயக கூட்டணி பதவியேற்ற பின்னர் கடந்த 4 ஆண்டுகளில் நாட்டின் தனி நபர் வருமானம் 45% அதிகரித்து உள்ளதாக புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளில் இந்தியாவில் தனிநபர் சராசரி வருமானம் 2 மடங்காக அதிகரித்து இருப்பதாகவும் மத்திய புள்ளியியல் துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய புள்ளியல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 2017-2018 நிதியாண்டில் தனி நபர் சராசரி வருமானம் ரூ.1, 12, 835 ஆகவும் 2018-2019ம் நிதியாண்டில் ரூ.1, 25, 397 ஆகவும் தனி நபர் சராசரி வருமானம் உயர்ந்து இருப்பதாக மத்திய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.

கடந்த 2015-16ஆம் ஆண்டில் நமது நாட்டில் தனி நபர் வருமானம் 94 ஆயிரத்து 130 ரூபாய் ஆக இருந்தது.
இது 2016-17ஆம் நிதியாண்டு மதிப்பீட்டின்படி 1 லட்சத்து 3 ஆயிரத்து 219 ரூபாயாக அதிகரித்தது. அதற்கு முந்தைய ஆண்டு தனி நபர் வருமானம் 7.4 சதவிகிதம் வளர்ச்சி கண்டிருந்தது.

நான்காண்டில் வளர்ச்சி

கடந்த 2011-2012ம் நிதியாண்டில் தனி நபர் சராசரி வருமானம் ரூ. 63, 462 இருந்தது. இது 2012-2013ம் நிதியாண்டில் தனி நபர் சராசரி வருமானம் ரூ. 70,983 ஆகவும் 2013-2014ம் நிதியாண்டில் ரூ.29,118 ஆகவும் அதிகரித்து உள்ளது. 2014-2015,2015-2016 மற்றும் 2016-2017ம் நிதியாண்டுகளில் தனி நபர் சராசரி வருமானம் முறையே ரூ.86,7647, ரூ. 94,731 மற்றும் ரூ.1,03,870 ஆக அதிகரித்து இருப்பதாக அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.

நாட்டின் பொருளாதாரம்

தேசிய ஜனநாயக கூட்டணி பதவியேற்ற பிறகான 4 ஆண்டுகளில் தனி நபர் வருமானம் 45% அதிகரித்து உள்ளதாக புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது. முன்னதாக இந்தியாவின் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 7.2% ஆக உயரும் என்று மத்திய புள்ளியியல் துறை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் தனி நபர் வருமானம்

தனிநபர் வருமானம் அதிகரிப்பது, ஒரு நாட்டின் செல்வ செழிப்பிற்கான அறிகுறி ஆகும். தமிழகத்தில், 2011 – 12ம் நிதியாண்டில், தனிநபர் வருமானம், 1 லட்சத்து, 3,600 ரூபாயாக மட்டுமே இருந்தது. ஆனால், 2017 – 18ல், இது, 1 லட்சத்து, 88 ஆயிரத்து, 492 ரூபாயாக அதிகரித்துள்ளது.இதன்மூலம், 2011ம் ஆண்டை காட்டிலும், தனிநபர் வருமானம், 85 ஆயிரம் ரூபாய் கூடுதலாகி உள்ளதாக சட்டசபையில் துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

source: oneindia.com

Share
Tags: oneindia

Recent Posts

திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் ரவிக்குமார் வெற்றி!

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கே.எஸ்.ரவிக்குமார் வெற்றி பெற்றுள்ளார்.தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல்…

17 hours ago

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கையிலிருந்து வந்து லொஸ்லியா இடம்பெற்றது எப்படி என உண்மையை வெளியிட்ட அவரது நெருங்கிய தோழி

பிரபல தமிழ் டிவி சேனலில் வரும் பிக்பாஸின் மூன்றாவது சீசனில் ரசிகர்களிடம் வேகமாக பிரபலமாகி வருவது லொஸ்லியா தான். அவ்வாறு நாட்கள் செல்ல செல்ல இவருக்கென புதுபுது…

17 hours ago

திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் ஆர்.கே.செல்வமணி வெற்றி

திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் 1,386 வாக்குகள் பெற்று வெற்றி ஆர்.கே.செல்வமணி பெற்றார். இன்று காலை தொடங்கிய வாக்குப்பதிவு நிறைவடைந்து, உடனே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.…

17 hours ago

காப்பான் படத்தில் ஐந்து பாடல்கள் இவைதான்

இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள். இந்த நிலையில் 'காப்பான்' திரைப்படத்தின் டிராக்லிஸ்ட் சற்று முன் வெளியாகி உள்ளதுஇந்த படத்தின்…

17 hours ago

அனைத்து சிம்பு ரசிகர்களும் தெறிக்க விடும் ஒரு முக்கியமான தருணம்

தமிழ் திரையுலகில் நடிகர் சிம்பு மிகுந்த திறமை கொண்டவர் என்பது பெரும்பான்மையான ரசிகர்களுக்கு தெரியும். மேலும் குழந்தையாக இருக்கும் போது தன் தந்தை டி.ராஜேந்தரால் சினிமாவில் நடிகராக…

17 hours ago

சூப்பர் ஹிட்டான 96 படத்தின் ரீமேக்கில் அதே மஞ்சள் நிற சுடிதாரில் அசத்தும் நடிகை சமந்தா

சென்ற வருடம் தமிழில் விஜய்சேதுபதி, த்ரிஷாவின் நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட்டான படம் 96 . ஏற்கனவே கன்னடத்தில் ரீமேக்கானதை தொடர்ந்து தெலுங்கிலும் தற்போது ரீமேக்காகி வருகிறது. இந்த…

17 hours ago