முதற்கட்ட விமான சேவைக்கு மத்திய அரசு ஒப்புதல் முதல்வர் நாராயணசாமி தகவல்

புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து பெங்களூரு, திருப்பதிக்கு முதற்கட்டமாக விமான சேவை தொடர்பான கோரிக்கையை மத்திய விமான போக்குவரத்துறை ஏற்றுக்கொண்டது என முதல்வர் நாராயணசாமி கூறினார்.சட்டசபை கமிட்டி ஹாலில் நேற்று அவர் கூறியது:கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில், நடந்த தென்னிந்திய முதல்வர்கள் மாநாட்டில், மாநில அரசுகளுக்கு இடையிலான பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது குறித்து…

அதிகாரியின் மொபைல் போன் ஆய்வகதிற்கு அனுப்பி வைப்பு

புதுச்சேரி: ஆபாச பட வீடியோ காட்சி யார் யாருக்கு அனுப்பப்பட்டுள்ளது என்பதை அறிய, பதிவாளர் சிவக்குமாரின் மொபைல் போன் ஹைதராபாத் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி மக்கள் சமூக வலைதளங்கள் மூலம் புகார் தெரிவிக்கும் வகையில், கவர்னர் கிரண்பேடி இரண்டு வாட்ஸ் ஆப் குழுவை உருவாக்கியுள்ளார். இக்குழுவில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., துறை செயலர்கள், இயக்குனர்கள் உள்ளனர்.கிராமப்புற வளர்ச்சி என்ற வாட்ஸ்…

போலீஸ்காரர் கொலை வழக்கு மேலும் ஒருவர் கைது

புதுச்சேரி: போலீஸ்காரர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.லாஸ்பேட்டை சாந்தி நகர் பாரி வள்ளல் தெருவைச் சேர்ந்தவர் அருணகிரி, 34; போக்குவரத்து போலீஸ்காரர். இவர், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மாயமானார்.இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், அருணகிரியை, அவரது மைத்துனியின் கணவர் சிவானந்தம் ராபர்ட் என்பவர், கடலுார் வண்டிப்பாளையத்தை சேர்ந்த முத்துராஜ், வில்லியனுார்…

புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜை

புதுச்சேரி: புத்தாண்டையொட்டி புதுச்சேரி கோவில்களில் சிறப்பு பூஜைகள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர்.மணக்குள விநாயகர் கோவிலில் நேற்று அதிகாலை 4:௦௦ மணிக்கு நடை திறக்கப்பட்டு, மூலவர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு, ராஜ அலங்காரத்தில் தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. பின், மகா தீபாராதனை நடந்தது. உற்சவரும் சிறப்பு அலங்காரத்தில்…

புத்தாண்டு பிரார்த்தனையை மிஸ் செய்த எலிசபெத் ராணி

இங்கிலாந்து ராணி எலிசபெத் கடந்த சில வாரங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். இதன் காரணமாக கடந்த வாரம் நடந்த கிறிஸ்துமஸ் பிரார்த்தனையில் அவர் கலந்துகொள்ளவில்லை. புத்தாண்டு பிரார்த்தனையில் கலந்துகொள்வார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், புத்தாண்டை ஒட்டி தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்புப் பிரார்த்தனையில் எலிசபெத் கலந்துகொள்ளவில்லை. அவர் சார்பஆக அவர் குடும்பத்தினர் கலந்துகொண்டனர். கடுமையான சளித் தொல்லையால் அவதிப்படுவதால் வீட்டை…

துருக்கியில் புத்தாண்டு கொண்டாடியபோது இரவு விடுதியில் தீவிரவாதி துப்பாக்கி சூடு: 39 பேர் படுகொலை

இஸ்தான்புல்: துருக்கியின் இரவுநேர கேளிக்கை விடுதி ஒன்றில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் இருந்தவர்கள் மீது தீவிரவாதி துப்பாக்கி சூடு நடத்தியதில் 39 பேர் பரிதாபமாக உயிர் இறந்தனர். துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் மிகப்பிரபலமான இரவுநேர கேளிக்கை விடுதியான ரெய்னா கிளப்பில் நேற்று முன்தினம் இரவு புத்தாண்டை கொண்டாடுவதற்காக வெளிநாட்டினர் உட்பட பொதுமக்கள் நூற்றுக்கணக்கில் வந்தனர். நேரம் செல்ல செல்ல…

அமைதியை நிலை நாட்டுவதை உறுதிமொழியாக ஏற்க வேண்டும்: ஐ.நா புதிய பொதுச் செயலாளர் வேண்டுகோள்

ஐநா: உலக மக்கள் அனைவரும் முதலில் அமைதியை நிலை நாட்டுவதையே புத்தாண்டு உறுதிமொழியாக ஏற்க வேண்டும் என்று ஐநாவின் புதிய பொதுச் செயலாளர் அன்டோனியா கட்டரஸ் வலியுறுத்தியுள்ளார். ஐநாவின் முன்னாள் பொதுச் செயலாளர் பான் கி மூனின் பதவிக் காலம் கடந்த 31ம் தேதியோடு முடிவடைந்தது. இதனையடுத்து புதிய பொதுச் செயலாளரான போர்ச்சுகீசிய நாட்டின் முன்னாள் பிரதமர் அன்டோனியா…

மசூத் அஸார் விவகாரம்: இந்தியாவின் நடவடிக்கைக்கு அரசியல் உள்நோக்கமே காரணம்: பாகிஸ்தான்

ஜெய்ஷ்-ஏ-முகம்மது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை ஐ.நா. சபை மூலம் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதற்கு இந்தியா முயற்சி மேற்கொண்டுள்ளதற்கு அரசியல் உள்நோக்கமே காரணம் என்று பாகிஸ்தான் விமர்சித்துள்ளது. இந்தியாவின் பஞ்சாப் மாநிலம், பதான்கோட்டில் உள்ள விமானப்படை தளத்தின் மீது ஜெய்ஷ்-ஏ-முகம்மது பயங்கரவாதிகள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலைத் தொடர்ந்து, ஜெய்ஷ்-ஏ-முகம்மது அமைப்பின்…