கார் கடனுக்கான கூடுதல் வட்டி வசூலித்த வெல்ஸ் பார்கோ வங்கிக்கு 100 கோடி டாலர் அபராதம்

சான்பிரான்ஸிஸ்கோ: அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோ நகரில் உள்ள வெல்ஸ் பார்கோ வங்கி கார் கடனுக்கான வட்டியைக் கூடுதலாக வசூலித்ததாகவும் வாடிக்கையாளர்களின் அனுமதி இல்லாமல் அவர்கள் பெயரில் வங்கிக் கணக்குகளை ஆரம்பித்ததாகவும் கூறப்படும். புகார்களுக்காக அந்த வங்கிக்கு 100 கோடி டாலர் அபராதம் விதிப்பதாக மத்திய வங்கி ஒழுங்குமுறை அமைப்பு இன்று அறிவித்தது. வெல்ஸ் பார்கோ வங்கிக்கு கிடைத்த கடுமையான தண்டனை…

பல நாடுகள் மத்தியில் இந்தியாவிற்கு நேர்ந்த உச்சகட்ட அவமானம்! என்ன செய்வார் மோடி!

காமன்வெல்த் மாநாட்டையொட்டி பிரதமர் மோடி லண்டன் சென்று இருந்தார். அங்கு அவரை எதிர்த்து காலிஸ்தான் ஆதரவாளர்கள், 500 இந்தியர்கள், மோடிக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக்கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இங்கிலாந்து நாடாளுமன்ற சதுக்கத்தில் குவிந்திருந்த அவர்கள் அங்கு ஏற்றப்பட்டு இருந்த இந்திய தேசியக்கொடியை, கொடிக்கம்பத்தில் இருந்து இறக்கி சிலர் அதை கிழித்தனர். இதனால் அங்கு மோதல் ஏற்பட்டது.…

உலகின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பை விட கடன் மதிப்பு அதிகரிப்பு : பொருளாதார மந்தநிலை ஏற்படும் என எச்சரிக்கை

நியூயார்க்: உலகின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பை விட கடன் மதிப்பு 226 விழுக்காடாக அதிகரித்துள்ளதால் மீண்டும் ஒரு பொருளாதார மந்தநிலை ஏற்படும் என பன்னாட்டு பணநிதியம் எச்சரித்துள்ளது. இதுவரை இல்லாத வகையில் உலகின் ஒட்டுமொத்த கடன் மதிப்பு 1கோடியே 64 லட்சம் கோடி டாலராக உள்ளது. இது இந்திய மதிப்பில் 106 கோடியே 60 லட்சம் கோடி ரூபாய்…

நிரவ் மோடி மீது ஹாங்காங் கோர்ட்டில் வழக்கு!

மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில், போலி உத்தரவாத கடிதம் அளித்து சுமார் 14 ஆயிரம் கோடி ரூபாய் வரை மோசடி செய்த வைர வியாபாரிகள் நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி வழக்குப்பதிவு செய்வதற்கு முன் வெளிநாட்டிற்கு தப்பி சென்றனர். பண மோசடி செய்துவிட்டு ஹாங்காங்கில் பதுங்கியுள்ள நிரவ் மோடியை, தங்களிடம் ஒப்படைக்க வெளியுறவு அமைச்சகம்…

பொது இடத்தில் முத்தமிட்டு காதல் செய்த ஜோடிக்கு பெரம்பு அடி

இந்தோனேஷியாவில் பொது இடத்தில் காதல் செய்த ஜோடிகளுக்கு பொது இடத்திலே வைத்து பெரம்பால் அடித்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்தோனேசியாவின் சுற்றுலா நகரங்களில் ஒன்றான அஹே மாகாணத்தில், நேற்று பொது இடத்தில் முத்தம் கொடுத்து காதல் செய்த ஜோடிகளுக்கு பெரம்பு அடி தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் இசுலாமிய சட்டமுறையான ஷெஹியா எனும் கடுமையான சட்டம் நடைமுறையில் உள்ளது. இதன்படி…

எலிசபெத் ராணியின் 92வது பிறந்தநாள் கொண்டாட்டம்

லண்டன்: எலிசபெத் ராணியின் 92வது பிறந்தநாள் இன்று பிரிட்டனில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரண்மனையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிறந்தநாளை முன்னிட்டு நடந்த அணிவகுப்பு நிகழ்ச்சியில் பாதுகாப்பு படையினரின் மரியாதையை ராணி ஏற்றார். உலக தலைவர்கள் பலர் ராணிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். Related Posts

அமெரிக்காவுக்குத் தண்ணி காட்டிய தீவு… வழிநடத்தபோகும் காஸ்ட்ரோ சகோதரர்கள் அல்லாத ஒருவர்!

கியூபாவில் சுமார் 60 ஆண்டுகளுக்குப் பின்னர் காஸ்ட்ரோ சகோதரர்கள் (பிடல், ராவுல்) அல்லாத ஒருவர், அந்நாட்டின் அதிபர் பொறுப்பை ஏற்கவுள்ளார். 1492- ம் ஆண்டின் முடிவில் கொலம்பஸ் கண்டறிந்த தீவான கியூபா, 16- ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஸ்பெயினின் ஆதிக்கத்துக்கு உள்ளானது. கிட்டத்தட்ட மூன்று நூற்றாண்டுகள் கியூபாவைச் சுரண்டியது ஸ்பெயின். பின்னர் 19- ம் நூற்றாண்டின் கடைசியில் கியூபாவை…

மெக்சிகோ நாட்டில் நடைபெற்ற புகை பிடிக்கும் விழா கோலாகலம்

மெக்சிகோ: மெக்சிகோ நாட்டில் நடைபெற்ற புகை பிடிக்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது. அந்நாட்டின் மெக்சிகோ நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமானவர்கள் பங்கேற்றதோடு விதவிதமான புகை பிடிக்கும் கருவிகளையும் கொண்டு வந்தனர். புகை பிடிக்கும் பழக்கமும், [போதை பொருள் கடத்தலும் உற்றத்தில் இருக்கும் மெக்சிகோவில் தற்போது அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. போதை பொருட்கள் பயன்பாட்டிற்கு சட்ட பூர்வ…

சந்தேகத்தால் மனைவி, குழந்தைகளை தண்ணீரில் மூழ்கடித்துக் கொன்ற கொடூரம்.. சிறையில் அடைக்கப்பட்ட சைக்கோ கணவன்…

இங்கிலாந்தில் இளைஞர் ஒருவர் தன் மனைவி மீது கொண்ட சந்தேகத்தால் அவரையும் இரண்டு குழந்தைகளையும் தண்ணீரில் மூழ்கடித்து கொன்றதுடன் வீட்டை பெட்ரோல் ஊற்றி கொளுத்தி தற்கொலைக்கு முயன்ற வழக்கில் அந்த இளைஞனுக்கு 31 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இங்கிலாந்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்தவர் சமி சலீம். இவருக்கு அரினா சயீத் என்ற மனைவியும் ஷாதியா என்ற…

அதிர வைக்கும் கள்ள நோட்டு புழக்கம்!

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் கள்ள நோட்டுகளின் புழக்கம் அதிகரித்து வருவதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இதே போன்று சந்தேகப்படும்படியான பணப்பரிவர்த்தனையானது 2016-17 நிதியாண்டில் 480 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் நிதித்துறை நுண்ணறிவு புலனாய்வு பிரிவு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இந்த நிதியாண்டில் மட்டும் ரூ.7 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பிடிபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. document.getElementById(“sampleDiv”).innerHTML=’ ‘;