கேரளாவுக்கு இலவச கால் மற்றும் டேட்டாக்கள்: செல்போன் நிறுவனங்கள் அறிவிப்பு

கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அம்மாநிலத்தின் பெரும்பகுதி சிறுசிறு தீவுகளாக மாறி தொடர்புகளே துண்டுக்கப்பட்டுள்ளன. எந்தவித போக்குவரத்தும் இல்லாத நிலையில் ஒரே ஆறுதல் இன்னும் ஒருசில செல்போன்களின் நெட்வொர்க்குகள் இயங்கி வருவதுதான். இதன் மூலம் தான் பிறரிடம் உதவி கேட்க முடிகிறது. அதிலும் பிரிபெய்ட் சிம் வைத்திருப்பவர்கள் ரீசார்ஜ் செய்ய…

கேரளா வெள்ளத்திற்கு காங்கிரஸ் கட்சியே காரணம்: சுற்றுச்சூழல் நிபுணர் கருத்து

கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத பேய்மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது. இந்த நிலையில் கேரளாவின் இந்த பெரும் சேதத்திற்கு கடந்த 2011ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியே காரணம் என சுற்றுச்சூழல் நிபுணர் மாதவ் காட்கில் என்பவர் கூறியுள்ளார். பேராசிரியரான…

ரூ.10 லட்சம் ஜீவனாம்சம் கோரிய கிரிக்கெட் வீரர் மனைவி மனு தள்ளுபடி

கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் அணி வேகப்பந்து வீச்சாளரான முகமது சமி, மாடல் அழகியான ஹசின் ஜஹான் என்பவரை திருமணம் செய்துகொண்டார். சில ஆண்டுகளிலேயே 2 பேருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சில மாதங்களுக்கு முன் ஹசின் ஜஹான், தனது கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும், தன்னை கொடுமை செய்து கொலை செய்ய முயற்சிப்பதாகவும் புகார் அளித்தார். அதோடு,…

கேரளா வெள்ள பாதிப்புகளை மோடி நாளை பார்வையிடுகிறார்

டில்லி: கேரளாவில் தொடர் மழை காரணமாக வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டது. 100 ஆண்டுகளில் கண்டிராத இந்த இயற்கை சீற்றத்தால் 324 பேர் உயிரிழந்திருப்பதாக அம்மாநில முதல்வர் பினராய் விஜயம் அறிவித்துள்ளார். இந்தநிலையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பிரதமர் மோடி நாளை (சனிக்கிழமை) ஹெலிகாப்டரில் சென்று பார்வையிடுகிறார். அவருடன் பினராயி விஜயன், அதிகாரிகள் உடன் செல்கின்றனர். இதற்கான ஏற்பாடுகள்…

பாகிஸ்தான் பிரதமராக முறைப்படி இம்ரான் கான் தேர்வு

கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறிய இம்ரான் கான், பாகிஸ்தானின் 22வது பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்திருக்கும் இம்ரான்கானின் பி.டி.ஐ கட்சி, சிறிய கட்சிகளின் ஆதரவுடன் நாடாளுமன்றத்தில் மொத்தம் 176 வாக்குகளை பெற்றது. எதிர்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் பிரிவின் பிரதமர் வேட்பாளர் ஷாபாஸ் ஷெரீஃப் 96 வாக்குகளை மட்டுமே பெற்றார். சபாநாயகர் முடிவை அறிவித்தபோது,…

கேரள மழை, வெள்ளம்: 324 பேர் பலி, முகாம்களில் 2.23 லட்சம் பேர், பிரதமர் விரைந்தார்

கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பில், தற்போது வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324 ஆக உயர்ந்துள்ளது என்றும், 2.23 லட்சம் பேர் 1,500-க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். முன்னதாக, திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மாநிலம் முழுதும் 1,568 நிவாரண முகாம்கள் உள்ளதாகவும் அவற்றில் 52,856 குடும்பங்களை சேர்ந்த சுமார் 2,23,000…

காவிரி கரையோரத்தில் சிவப்பு எச்சரிக்கை

மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், கரையோர பகுதிகளில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளா மற்றும் கர்நாடகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளிலிருந்து வினாடிக்கு 2 லட்சம் கன அடிக்கும் அதிமாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும்…

ஊழல் வழக்கில் 12-வது முறையாக இஸ்ரேல் பிரதமரிடம் விசாரணை

ஜெருசலேம்: யூதர்களின் நாடான இஸ்ரேலின் பிரதமராக பெஞ்சமின் நேதன்யாகு கடந்த 2009-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார். ஏற்கனவே, 1996-99 முதல் அவர் பிரதமராக இருந்துள்ளார். தனது பதவிக்காலத்தில் தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து பரிசுப்பொருள் பெற்றதாகவும், எதிர்க்கட்சிகளை விமர்சித்து செய்தி வெளியிட ஊடக நிறுவனம் ஒன்றிடம் டீல் பேசியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டுகளில் உண்மை உள்ளதா?…

ஊழல் வழக்கு தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் அதிபரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மக்கள் கட்சி இணைத் தலைவரும் அந்நாட்டின் முன்னாள் அதிபருமான ஆசிப் அலி சர்தாரி மற்றும் அவரது சகோதரி ஃபர்யால் தல்புர், பாகிஸ்தான் பங்குச்சந்தை முன்னாள் தலைவர் ஹுசைன் லவாய் உள்பட மொத்தம் 19 பேர் வங்கிகளில் பினாமி பெயரில் 29 கணக்குகளை தொடங்கி, அவற்றின் மூலமாக சுமார் 3500 ம்கோடி ரூபாய் பணத்தை கள்ளத்தனமாக இடம்மாற்றியதாக…

சீனாவில் பதறவைத்த ஆன்லைன் பார்சல்

பெய்ஜிங்: சீனாவின் சுஜாங்க் நகரில் வசித்துவரும் ஷாங் என்ற பெண் உடல்நலத்துக்காக ஹெல்த் சப்ளிமென்ட் பொருள்களை ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார். மூன்று பெட்டிகளில் பொருள்கள் சரியாக வந்த நிலையில், 4-வது பெட்டியில் உயிரிழந்த ஒரு முதலைக் குட்டியும், பல்லியும் இருந்துள்ளது. இதனை பார்த்த ஷாங் அதிர்ச்சியடைந்திருக்கிறார்.